|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/quick-way-to-learn-english-typing-for-beginners-in-tamil/
课程评论:没有评论
课程名称:快速学习英语打字(初学者,泰米尔语授课) 课程概述: 本课程旨在帮助初学者掌握正确的电脑键盘使用方法。虽然如今大多数人都在使用电脑,但很多人并不知道如何高效打字。课程提供了系统的英语打字教学,特别是针对说泰米尔语的学习者。通过在本地的电脑培训中心教授,我的许多学生已经成功通过培训获得政府证书。 学习者只需每天花30分钟进行练习,确保在15天内能熟练操作电脑键盘。课程采用母语泰米尔语授课,研究表明,使用母语学习更为高效。对于希望用英语学习的学习者,课程也提供了单独的选择。 课程中不仅仅教授英语打字技巧,还对电脑键盘的功能和操作进行了详细解释,因为了解键盘的使用方法能够增强你在使用电脑时的信心。重要的是,课程强调逐步学习,需在完成每个课程后再进入下一个,以确保全面的理解和练习。 本课程包含27个教学视频和3个PDF资料,适合个人及其家庭成员、朋友共同学习。若课程对你有帮助,欢迎将其推荐给朋友们。最后,练习是人成长的关键,不可只停留在理论上,借助本课程的培训,你将在职场和日常工作中受益匪浅。 充满诚意与祝福的,K. Sivayudimi 教练
வணக்கம், தற்பொழது அனைவரும் கம்ப்யூட்டர் பயன்படுத்துகிறோம். ஆனால் பெரும்பாலோருக்கு எப்படி கம்ப்யூட்டர் கீபோர்ட் சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்று தெரிவது இல்லை. அவரவர்கள் தங்களுக்கு ஏற்றப்படி ஏதாவது வழியை பின்பற்றி டைப் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால் இந்த கோர்ஸ்யில் உங்களுக்கு முறையாக இங்கலிஷ் டைப்பிங் எப்படி கற்று கொள்வது என சொல்லி தரப்பட்டு இருக்கிறது. நான் கம்ப்யூட்டர் பயிற்சியோடு, டைப் பயிற்சி மையமும் எங்கள் ஊரில் நடத்தி கொண்டு இருப்பதால் என்னிடம் பயின்ற பல மாணவர்கள் டைப் ரைட்டிங் பயிற்சி பயின்று அரசாங்க சான்றிதழ் பெற்று பயடைந்துள்ளனர். இந்த பயிற்சியை நீங்கள் உங்கள் வீட்டிலேயோ அல்லது அலுவலகத்திலேயோ தினமும் 30 நிமிடங்கள் நாள் ஒன்றுக்கு செலவிட்டால் போதுமானது. 15 நாட்களிலேயே தாங்கள் கம்ப்யூட்டர் கீ போர்ட் பயன்படுத்துவதில் வல்லவராக திகழ்வீர்கள் என்று உறுதியுடன் கூற முடியும். இந்த பயிற்சி தமிழ் வழியில் கற்றுத் தரப்பட்டுள்ளது. தாய்மொழியில் எந்த கல்வியையும் கற்கும்பொழதும் எளிதாக கற்றுக் கொள்ள முடியும் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. அதற்காகவே இந்த பயிற்சி நமது தாய்மொழி தமிழில் வழங்கப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் கற்க விரும்புகிறவர்களுக்காக தனிக் கோர்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில வழியில் இங்கிலீஷ் டைப்பிங் பயிற்சி கற்க விரும்புகிறவர்கள் அதனை தேர்ந்தெடுத்து பார்த்து படித்து பயனடையுங்கள். இந்த பயிற்சியில் நான் இங்கிலீஷ் டைப் ரைட்டிங் மட்டும் சொல்லித்தரவில்லை, கம்ப்யூட்டர் கீபோர்ட் பற்றிய விளக்கங்களையும் அதனுடைய செயல்பாடுகளையும் விவரித்துள்ளேன். ஏனெனில் கீபோர்ட் பற்றிய தெரிதல் இருந்தால் மட்டுமே நாம் கம்ப்யூட்டர் கீபோர்டை தன்னம்பிக்கையுடன் பணியாற்றமுடியும் என்று அதைப் பற்றியும் விவரித்துள்ளேன். அடுத்தடுத்த பயிற்சிகளுக்கு உடனே சென்று விடவேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன். முதல் பாடம் பார்த்தவுடன் உங்கள் கம்ப்யூட்டரில் முதலில் நான் கூறியப்படி பயிற்சியை மேற்க்கொள்ளுங்கள். அந்த பயிற்சியை முடித்த பிறகே அடுத்த பாடத்திற்கு தாங்கள் செல்லவேண்டும். அப்பொழதுதான் முழுமையான பயிற்சியாக இருக்கும். அதை விடுத்து தாங்கள் அடுத்தடுத்த பயிற்சியை பார்த்திர்கள் என்றால் உங்களுக்கு இந்த பயிற்சி பாடம் பயனளிக்காது. எனவே இந்த கோர்ஸ்ஸில் பயிற்சிதான் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த கோர்ஸ்ஸில் 27 பாடங்களும் மற்றும் 3 பிடிஎஃப் இணைப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி உங்களுக்கு மட்டுமல்லாது உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும், நண்பர்களுக்கும் பயன்பட கூடிய ஒன்று. எங்கள் இந்த பயிற்சி பயனுடையதாக இருப்பதாக கருதினால் உங்கள் நண்பர்களுக்கும் இந்த பயிற்சியை வாங்கி பயடைய செய்யுங்கள் கடைசியாக, பயிற்சி மட்டுமே ஒரு மனிதனை முழுமையானவனாக மாற்றும். அதனால் கற்றலோடு நில்லாமல் பயிற்சி மேற்கொள்ளுங்கள் உங்கள் வேலைவாய்ப்பிற்கும், அலுவலக பணிகளுக்கும் இந்த பயிற்சி பயனளிக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. நன்றிவாழ்த்துக்களுடன்,க. சிவாயுடிமி பயிற்சியாளர்