|
所在平台: Udemy |
课程主页: https://www.udemy.com/course/comparativegrammar/
课程评论:没有评论
课程名称:比较语法 课程概述:本课程由赛维特里博士教授,主题为“泰米尔语-泰卢固语语法比较:应做与不应做”。赛维特里博士是印度泰米尔大学印度语言与比较语言学院的助理教授,专注于泰米尔语和泰卢固语的对比研究。他在国际上发表了多篇论文,具有丰富的语法研究背景,并曾将多部泰卢固语语法书翻译成泰米尔语。 该课程特别关注泰米尔语和泰卢固语的语法比较。泰米尔语具有“创造性泰米尔、音乐性泰米尔、戏剧性泰米尔”三个子类别,合称为“Muthamil”。这些类别各自有独立的语法体系,最古老的语法著作《阿卡提亚姆》属于创造性泰米尔。一般而言,泰米尔语法主要指创造性泰米尔的语法,它涵盖诗歌和散文的形式。 泰米尔语法可以分为五种类型,学者们通常会将其归为三种、六种或七种类型。泰卢固语的最早语法著作是《安得拉沙布达钦塔曼尼》,由被称为泰卢固语第一位诗人的纳奈亚创作,生活在11世纪。随着时间的发展,其他学者如阿达尔瓦和阿科帕拉也开始编撰语法。19世纪的著名学者钦纳亚·苏里在其著作《巴拉维亚卡南》中进一步详述了纳奈亚的理论。 本课程的重点是识别与语法比较相关的内容,并明确在语法比较过程中应遵循和避免的原则。 感谢给予发布本课程许可的教授。
முனைவர் சி.சாவித்ரி அவர்கள் தமிழ் - தெலுங்கு இலக்கண ஒப்பாய்வுகள்: செய்தன, செய்யவேண்டியன எனும் பாடப்பொருளின் ஆசானாக அமைகின்றார். இவர், உதவிப்பேராசிரியர், இந்திய மொழிகள் பள்ளி மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், தமிழ்நாடு, இந்தியாவில் பணியாற்றி வருகின்றார்.இவர் பன்னாட்டளவில் பல்வேறு ஆய்வுரைகளையும் ஆய்வுக் கட்டுரைகளையும் வழங்கியவர்.தெலுங்கில் பாண்டித்துவம் பெற்றவர்.தெலுங்கு மொழி இலக்கணங்களான ஆந்திர சப்த சிந்தாமணி (கி.பி.11), பாலவியாகரணம் (கி.பி. 1858) தமிழில் மொழியாக்கம் செய்தவர்.தமிழ் - தெலுங்கு ஒப்பாய்வுகளில் கவனம் செலுத்தி வருபவர்.இப்பாடத்தை வெளியிடுவதற்கு அனுமதி நல்கிய பேராசிரியருக்கு நன்றி.Dr. Ch. Savithri is the teacher of the Tamil-Telugu Grammar Comparisons: Do's and Don'ts. He is an Assistant Professor, School of Indian Languages and Comparative School, Tamil University, Thanjavur, Tamil Nadu, India.He has authored various dissertations and dissertations internationally.Scholar in Telugu.Translated Telugu grammars Andhra Sabtha Chintamani (AD 11) and Balaviyakaranam (AD 1858) into Tamil.Focusing on Tamil-Telugu comparisons.Thanks to the professor for giving me permission to publish this course.தமிழ் மொழி 'இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ்,' என மூன்று பிரிவுகளை உடையது. இவையே 'முத்தமிழ்' என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத்தனர். அகத்தியம் முத்தமிழுக்கும் உரிய இலக்கண நூல் என்பர். இருப்பினும், பொதுவாகத் தமிழ் இலக்கணம் என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள், உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும்.தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவை,எழுத்துசொல்பொருள்யாப்புஅணிஅறிஞர்கள் தமிழ் இலக்கணத்தை மூன்று வகை இலக்கணம் என்றும் ஆறு இலக்கணம் என்றும் ஏழு இலக்கணம் என்றும் வகைப்படுத்துவர் (விக்கிப்பீடியா).தெலுங்கு மொழியில் முதல் இலக்கணமாக (தெலுங்கு: వ్యాకరణం vyākaraṇam), ஆந்திர சப்த சிந்தாமணி (தெலுங்கு: ఆంధ్ర శబ్ద చింతామణి Āndhra śabda cintāmaṇi) சமஸ்கிருதத்தில் எழுதப்பட்டது. இதன் ஆசிரியர் நன்னயா ஆவார். இவர் தெலுங்கு மொழியின் முதல் கவிஞராக (ஆதிகவி) விளங்குகின்றார். அதுமட்டுமின்றித் தெலுங்கு மொழியின் இலக்கண கர்த்தாக்களுள் முதல்வராகவும் இடம்பெறுகின்றார். இவர் 11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறார். இவருக்குப் பிறகு அதர்வணாவும் அகோபலாவும் சூத்திரங்களை உருவாக்கியுள்ளனர். அவை வர்திகாஷ், பாஷ்யம் என்பன.நன்னய்யாவிடமிருந்து கருத்துகளையும் கோட்பாடுகளையும் பெற்று 19ஆம் நூற்றாண்டில் சின்னாய சூரி, தான் எழுதிய தெலுங்கு இலக்கண நூலாகிய பாலவியாகரணத்தில் (குறிப்பு- இது குழந்தைகளுக்கான இலக்கணம்), விரிவாக விளக்கியுள்ளார்.நன்னயாவின் கூற்றுப்படி 'நியம' அல்லாத மொழிகளையும் வியாகரணத்தைப் பின்பற்றாத மொழியையும் கிராமியம் (கிராமிய மொழியம்) அல்லது அபப்பிரம்சம், என அழைக்கப்படுகிறது. இவ்விலக்கணத்தில் அம்மொழிகள் இலக்கிய பயன்பாட்டிற்குத் தகுதியற்றதாக உள்ளது. தெலுங்கில் உள்ள அனைத்து இலக்கிய நூல்களும் வியாகரணத்தைப் பின்பற்றுகின்றன (விக்கிப்பீடியா).இத்தகு மொழிகளுக்குரிய இலக்கணங்களை ஒப்பாய்வு செய்தவற்றையும் செய்யவேண்டியவற்றையும் அடையாளப்படுத்துகின்றது இப்பாடம்."I, Dr. Sathiyaraj Thangasamy , certify, under the penalty of perjury, that I am the original owner of all of the content used in my course(s) and, if applicable, have secured all the necessary rights to use content owned by another individual".